Thursday 12 December 2019

சங்கம் மீட்போம் - கோவிந்தராஜன்


கோவிந்தராஜன்  சி.


கோவிந்தராஜனும் செல்வரத்தினமும் உடன்பிறவா சகோதரர்கள். கோவிந்தராஜனும் இலக்கிய ஈடுபாடு கொண்டவர். 

தமிழ்ப் பற்றாளர்.  இலக்கியத்திலும் வாசிப்பிலும் ஈடுபாடு கொண்டவர். ஊரில் இவர் தோற்றுவித்த நூலகம் இன்று பொது நூலகமாக நிலைத்து நிற்கிறது. 

பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்திலேயே சமூக-அரசியல்-பண்பாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் துவங்கியவர். ஏராளமான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றவர்.


தில்லியில் செல்வரத்தினத்துடன் இணைந்து யுசிசி எனும் கிரிக்கெட் அணியை உருவாக்கியுள்ளார். 2001இல் துவக்கப்பட்ட இந்தக் குழு இப்போதும் முப்பதுக்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட அணியாகத் திகழ்கிறது. தில்லியில் தமிழ் விளையாட்டு அணி என்றால் இவர்கள் அணிதான்.


சொந்த மண்ணில் நேரு யுவ கேந்திராவுடன் இணைந்து மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தை உருவாக்கியவர். இதன் மூலம் இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறையில் எதிர்காலத்தை உருவாக்கியவர். 

தில்லியில் மிகப்பெரியதொரு நவீன அச்சகத்தில் உயர் பதவியில் இருக்கிறார். தமிழர்கள் என்ன உதவி கேட்டாலும் தட்டாமல் செய்து தருபவர்.

உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து ஏரிகளைப் பராமரித்தல், தெருக்களை சுத்தம் செய்தல், பள்ளிகளை சீர் செய்தல், நூலகத்தை மேம்படுத்தல் என ஏராளமான நற்பணிகளை மேற்கொண்டவர். அந்த அனுபவங்களின் மூலம், மிகப் பெரிய நட்புக் குடும்பத்தை சம்பாதித்து வைத்திருப்பவர். தில்லியில் இவர் பின்னார் ஓர் இளைஞர் படை இருக்கிறது.  

ஊரில் உள்ள பள்ளிக்கு மதில்சுவர் கட்டித்தருதல், வகுப்பறைகளில் மாணவர்களுக்கு பெஞ்சுகள் மற்றும் நாற்காலிகள் வழங்குதல் போன்ற அறப்பணிகளும் செய்துள்ளார்.

No comments:

Post a Comment