Thursday 12 December 2019

சங்கம் மீட்போம் - செல்வரத்தினம்


செல்வரத்தினம் எம்



சிறந்த தமிழ் பற்றாளர். இலக்கியத்திலும் புத்தக வாசிப்பிலும் ஈடுபாடு கொண்டவர். எழுத்தாள சுஜாதா என்ற ரெங்கராஜனின் ரசிகர். கண்ணதாசன், வாலி போன்ற கவிஞர்களின் கவிதைகளுக்கு அடிமை. 

சிறந்த பொது சிந்தனையாளர் மிகவும் ஆர்வமானவர். 300 க்கும் மேற்பட்ட குடும்ப நபர்களைக்கொண்ட கூட்டு உறவுகளைக்கொண்ட குடும்பத்தை வழிநடத்தும் குடும்பஸ்தர்.

பள்ளிக்காலங்களிலேயே கவிதை, கட்டுரை, நாடகம், ஓரங்க நாடகம், நடனம், நினைவுத்திறன் போன்ற போட்டிகளில் பங்கேற்று ஏராளமான சான்றிதழ்களைப் பெற்றவர்.

விளையாட்டுத்துறையில் கோ கோ, டென்னிகாய்ட், வாலிபால், சாஃப்ட் பால், கபடி, தடகளப் போட்டிகளில் ஆர்வம் கொண்டு பல வெற்றிகளைப் பெற்றவர். பள்ளியில் கபடி அணித் தலைவராக இருந்தவர். இப்போது சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர். 

தில்லியில் கோவிந்தராஜனுடன் இணைந்து யுசிசி எனும் கிரிக்கெட் அணியை உருவாக்கியுள்ளார். 2001இல் துவக்கப்பட்ட இந்தக் குழு இப்போதும் முப்பதுக்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட அணியாகத் திகழ்கிறது. தில்லியில் தமிழ் விளையாட்டு அணி என்றால் இவர்கள் அணிதான்.

சொந்த மண்ணில் நேரு யுவ கேந்திராவுடன் இணைந்து மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தை உருவாக்கியவர். இதன் மூலம் இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறையில் எதிர்காலத்தை உருவாக்கியவர். 

உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து ஓடைகள், குளங்களைப் பராமரித்தல், ஏரிகளைத் தூர்வாருதல், தெருக்களை சுத்தம் செய்தல், பள்ளிகளை சீர் செய்தல், நூலகத்தை மேம்படுத்தல் என ஏராளமான சமூகப் பணிகளை மேற்கொண்டவர். 

அந்த அனுபவங்களின் மூலம், மிகப் பெரிய நட்புக் குடும்பத்தை சம்பாதித்து வைத்திருப்பவர். நான் என்பதை விரும்பாமல் நாம் என்பதையே மூச்சாகக் கொண்டவர் என்பதால், இணக்கத்துடன் குழுவாகப் பணிபுரிவதில் சிறந்தவர். 

No comments:

Post a Comment