Showing posts with label தில்லித் தமிழ்ச் சங்கம். Show all posts
Showing posts with label தில்லித் தமிழ்ச் சங்கம். Show all posts

Saturday, 7 December 2019

சங்கத் தேர்தல் 2019

அன்பார்ந்த சங்க உறுப்பினர்களே,

வணக்கம்.

சங்கத்தை நிர்வகிக்கும் செயற்குழுவுக்கான தேர்தல் 2019 டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுகுறித்த சுற்றறிக்கைகள் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.

வழக்கம்போல பலரும் போட்டியிடுகிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் நோக்கங்களுக்காகப் போட்டியிருக்கிறார்கள்.

சங்கம் மீட்போம் என்னும் அணியாகச் சேர்ந்திருக்கிற நாங்கள், சங்கத்தின் நிர்வாகத்திலும் நிகழ்ச்சிகளிலும் நல்ல மாற்றங்களைக்கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் போட்டியிடுகிறோம்.

இந்த வலைப்பூவில், எமது அணியினரைப்பற்றி, எங்கள் கொள்கைகளைப் பற்றி, நாங்கள் செய்ய விரும்பும் செயல்களைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

அண்மை ஆண்டுகளாகவே தமிழ்ச் சங்கம் சரியான தலைமை இல்லாமல், பாதை தவறி திசை மாறிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதை மீண்டும் சரியான பாதைக்குத் திருப்ப வேண்டுமானால்
- நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை வலியுறுத்துகிற
- உறுப்பினர்களுக்குப் பதிலளிக்கும் பொறுப்பு உடைய
- புதிய திறமைகளைப் பயன்படுத்திக் கொள்கிற
- திரும்பத் திரும்ப தாமே பதவிக்கு வரத் துடிக்காத
- புதிய சிந்தனைகளை செயல்படுத்த விரும்புகிற
புதியவர்கள் பொறுப்புக்கு வர வேண்டும்.

வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே நடந்து கொண்டிருக்கும் சங்கத்தை தமிழின் பெருமையைப் பரப்பும் அமைப்பாக மாற்றுவதற்கு, செயல் திட்டம் கொண்ட ஒரே அணி எங்கள் அணி மட்டுமே

சங்கம் மீட்போம் அணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


எமது அணியினரைப் பற்றிய தகவல்களை, கொள்கை அறிக்கையை அடுத்தடுத்த பதிவுகளில் நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவித்து எம்மை செம்மைப்படுத்தலாம். இந்த வலைப்பூ பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து, அவர்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டுமாறு வேண்டுகிறோம்.

மேலும் அறிய :
சங்கம் மீட்போம் அணியினர்
சங்கம் மீட்போம் அணி ஏன் போட்டியிடுகிறது
மும்முனைப்போட்டி உருவானது ஏன் 
சங்கத்தின் முன் உள்ள சவால்கள்
புதிய உறுப்பினர் சேர்க்கை ஏன் தேவை 
ஷாஜஹான்
குமார்
வாசுதேவன்
டாக்டர் வெங்கடேஸ்வரன்

கோவிந்தராஜன்
செல்வரத்தினம்
கிருஷ்ணமூர்த்தி